கள்ளச்சாராயம் விற்பனை செய்த 43 பேர் கைது 200 லிட்டர் சாரயம் பறிமுதல்

கள்ளச்சாராயம் விற்பனை செய்த 43 பேர் கைது 200 லிட்டர் சாரயம் பறிமுதல்


" alt="" aria-hidden="true" />


தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக 43 பேரை போலீசார் கைது அவர்களிடமிருந்து 200 லிட்டர் சாரயம் பறிமுதல் செய்து 95 லிட்டர் ஊரல்களை அழித்தனர்.


தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் தலைமையில் டிஎஸ்பி செல்லபாண்டியன், மதுவிலக்கு அமல் பிரிவு டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் கோட்டப்பட்டி காவல் ஆய்வாளர் ரவி, உள்பட காவலர்கள் அரூர் உட்கோட்டத்திற்குட்பட்ட கோட்டப்பட்டி, கடத்தூர், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சோதனை செய்தனர். அப்போது கள்ளச்சாராயம் விற்பனை செய்துவருவதாக வந்த தகவலை அடுத்து ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்கள் கள்ளச்சாராயம் விற்பனை செய்திருப்பதை உறுதி செய்த பின்பு அவர்களை ஆதாரத்துடன் விசாரணை செய்து கைது செய்தனர்.


இதில் 2 பெண் உட்பட 43 பேர் கைது செய்து கிருஷ்ணகிரி மற்றும் சேலம் சிறைச்சாலைக்கு கொண்டு சென்றனர். இவர்களிடமிருந்து இரண்டு இரு சக்கர வாகனங்கள், சுமார் 200 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்ததாகவும் மற்றும் 95 லிட்டர் ஊரல் பறிமுதல் செய்துள்ளனர். அப்போது சேலம் சரக டிஐஜி பிரதீப் குமார் அப்போது ஆய்வு மேற்கொண்டார்.


அப்போது அவர் பேசியதாவது:- 144 ஊரடங்கு தடை உத்தரவு இருக்கும் சூழ்நிலையில், மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருப்பதால் கள்ளச்சாராய விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவதாக வந்த தகவலை தெரிந்தவுடன் காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டு, கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் வகையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறோம். திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த நபர்கள் வாங்கி வந்து கோட்டப்பட்டி, சிட்லிங், அரூர் உள்ளிட்ட பகுதிகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாகவும் தொடர்ந்து தகவல்கள் வருகின்றது.


கள்ளச்சாராயத்தை தடுக்கும் வகையில் கள்ளச்சாராய விற்பனை செய்வார்கள் மற்றும் அதை வாங்கிச் செல்வார்கள் என அனைவரையும் பிடித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்வதாகவும், மேலும் இதுபோன்று கள்ளச்சாராயம் விற்பனைகளில் ஈடுபட்டால் அவர்களின் மீதும் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம், கள்ளச்சாராயம் ஒழிக்கும் வரை தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட போவதாகவும் அவர் கூறினார்.